Tag Archive | Jaffna

மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலை

யாழ்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்க்கு நிச்சயம் மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலையை (Manipay Green Hospital)  தெரிந்திருக்கும்.

ஒரு காலத்தில் திறமையான வைத்தியத்துக்கு கொடிகட்டி பறந்த வைத்தியசாலை 30 வருட போரின் பாதிப்பால் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்படிருப்பது மனவருத்ததுக்குரியது.

அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சில நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.  கீழ்வரும் காணொலியில் (video) முன்னாள் யாழ்   வைத்திய நிர்வாகஸ்தர்  நச்சினார்கினியன்(Former Director of Jaffna  General Hospital) விளக்கும் தகவல்களை  பார்த்து உங்களுக்கு ஏற்றமுகமாக உதவி செய்யுங்கள்.

பண உதவி செய்யாவிடினும்  முகநூலில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை உங்கள் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை

நன்றி.

Advertisements

சரளமாக தமிழ் பேசும் ஜர்மனிய பெண்

ஜர்மனிய பெண் யாழ்ப்பாணத் தமிழில் சரளமாக மொழியாடும் பேட்டி  இந்த சுட்டியில் இடம் பெறுகிறது.

தற்போது இங்கிலாந்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் இந்தப் பெண்மணி தனது 12வது வயதில் தமிழில் பேச ஆரம்பித்ததாக கூறுகிறார்.

ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் இருந்து ஜர்மனிக்கு புலம் பெயர்ந்த தமிழரோடு தமிழில் கதைத்து  தமிழரைபோல் பேசுவது செவிக்கு இனிமையாக உள்ளது.

தமில் பேசுவது மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த பெற்றோருக்கும் பிள்ளைகளுடன் தமிழில் பேசும்படி ஒரு சவாலையும் முன் வைக்கிறார்.

நீங்களும் இப் பெண்மணியின் பேட்டியை கேட்டுத்தான் பாருங்களேன்.

பிற்குறிப்பு:

பேட்டி கண்டவர் இப் பெண்மணியின் பெயரையும் கூறியிருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும்.

 

தொடர்புள்ள துணுக்குகள்: