Tag Archive | திரை பாடல்கள்

நாதஸ்வரத்தில் திரைப்பாடல்

வரியந்தோரும் நடக்கும் யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் தவில் நாதசுர கச்சேரிகள் சகஜம். கோயில்களுக்கேற்ப 10, 15,25 நாட்களென திருவிழாக்கள் தொடரும். திருவிழாக் கடைசி நாட்களில் முக்கியமாக சப்பறம், தேர், தீர்த்தம் , பூங்காவனம் போன் ற  திருநாட்களில் பல தவில் நாதஸ்வர வித்துவான்கள் கச்சேரிக்கு வருவார்கள்.  இவர்கள் கச்சேரி, கடைசியில் மேளச் சமாவுடன் முடிவு பெறும்.

பிரசித்தி பெற்ற யாழ்  நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக்களில் 23ம் நாள் தேர் உற்சவம் நடைபெறும். காலையில் தேர் இழுத்த பிற்பாடு,  பிற்பகலில் சாமி இறக்குவதற்கு முன் தவில் /நாதஸ்வரக் கச்சேரி  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.  இது இலங்கை வானொலியில் அநேகமாக ஒலிபரப்பப்பட்ட காலமும் உண்டு. (தற்போதய நிலை தெரியாது).

கிராமப்புற கோவில் திருவிழாக்களில் தவில் கச்சேரிக்குப் பின்னால்  “சின்ன மேளம்” நடனக்குழு, பொப் இசை பாடல் குழு என இத்தியாதி இத்தியாதி. இதற்காக இரசிகர் கூட்டம் பல தூர இடங்களில் இருந்து படையெடுக்கும். இதைவிட இலங்கை இந்திய புகழ் பெற்ற யாழ் மகன்  தட்சனாமூர்த்தியின் கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். தவில் மேதையை பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் வாரி வாரியாக வந்திறங்கும்.

சிறுவயதில் மீசாலையில்  வெறுங்கால்களுடன் மணல் வீதிகளை உலாத்தி  வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில் திருவிழாக்களை பார்த்த காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.  சாவகச்சேரி நாதஸ்வர  வித்துவான் ஸ்ரீ பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலக்கிருஷ்ணன் நாதஸ்வர சகோதரர்கள், தவில் கணேசன், கானா மூர்த்தி – பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இப்படிப் பலப் பல கலைஞர்கள்….

இக்கோவிலில் பல  தவில் கச்சேரிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு  தொடங்கும் கோலாகலம் விடிய விடிய தொடரும்.ஒரு தவில் நாதஸ்வர குழுவிற்கு சுமாராக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். கச்சேரிகள் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்து கீர்த்தனைகள் வாசித்து கடைசி 10 – 15 நிமிடங்கள் திரைப்பட மெட்டிற்கு ஒதுக்கப்படும். இளவயது ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான நேரம். நடுச் சாமத்தில் பாதி கண் மூடி கோழித்தூக்கம் போட்டவர்கள், கச்சான் கொறித்துக் கொண்டிருப்பவர்கள், ஊர்க்கதை அலட்டிக் கொண்டிருப்பவர்கள்  எல்லாம்  நாதஸ்வரத்தில் திரைமெட்டு தொடங்கியவுடனேயே பரபரப்பாக விழித்துக்கொள்வார்கள், திரைமெட்டைக் கண்டு பிடித்தவுடனே கூட்டத்தில் கைதட்டல் தொடங்கிவிடும். தில்லானா மோகனாம்பாள், திருவிளயாடல் திரைப்படப் பாடல்கள், இதை விட சிங்காரவேலனடி தேவா, அதிசயராகம் (அபூர்வ ராகம்) போன்றமெட்டுக்கள் பிரபலம்.

இவையெல்லாம் பார்த்து பலவருடங்களாகி விட்டன. போர்க் காலங்களில் திருவிழாக் கச்சேரிகள் பகல் வேளையில் வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். யதேட்சையாக முகநூலில்  கீழ்வரும் காணொலியை பார்த்தவுடன்  பழைய நினவுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.  இந்தக் காணொலியும் யாழ்ப்பாணத்தில் குமரன் குழுவினர்களால் வாசிக்கப்பட்டது என்பது முகநூல் தகவல்கள். இதில் உள்ள நாதஸ்வர வித்துவான் வேறுயாருமல்ல. புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன்! நான் கேட்டு ரசித்தது போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்..

நன்றி: முகநூல்- தமிழ் வானம்

 

Advertisements

சித்திரைப் புத்தாண்டு 2014

2014 இல் சித்திரையும் பிறந்துவிட்டது. புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் மங்கல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்! அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக! ( சித்திரம் :முகநூல் பிம்பம்)

தமிழுக்குரிய மாதங்கள்  பன்னிரெண்டும் சூரியனை  வைத்து கணிக்கப்படுகிறது.  வான சாஸ்த்திரங்களின் (Astrological)  கணிப்புப்படி சூரியன் மீண்டும் ஒருமுறை 12 இராசிகளிலும் சுற்ற ஆரம்பிக்கும் நாளே சித்திரை வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இதை தமிழர், தெலுங்கு உட்பட பல இனத்தவர் இந்தியாவில் கொண்டாடுவர். இலங்கையில் தமிழரும் சிங்களவரும் கொண்டாடும்  ஓர் பொதுப் பண்டிகை.

 

சித்திரையில் பிறக்கும் வருடம்,  ஓர் இந்துத் திருநாள் எனவும் அது தமிழ் புது வருடம் அல்ல என வாதடுபவர்களும் உண்டு. தமிழ் இலக்கிய வாயிலாக  எப்போதும் நம் முன்னோர்கள் தைமாதத்தை வைத்துத் தான் புதுவருட செய்யுள்கள் பாடப்பட்டுளன  என்பது  அவர்களின் வாதம். அதனால் தானோ  “தை பிறந்தாள் வழி பிறக்கும் ”  என்ற பழமொழி உருவாகியது? இது தொடர்புடைய இணையங்ககளை கீழே குறிப்பிடுகிறேன் – விரும்பியவர்கள் படியுங்கள்.

எது எப்படி இருப்பினும் கலாச்சார ரீதியாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாள் கிடைத்துவிட்டது!

 

சித்திரை சம்பத்தப்பட்ட சில துணுக்குகள்:  

முதலில்  யாழ் நல்லூர் கந்தசாமி கோவிலில்  சித்திரை புத்தாண்டு பூஜையக் காட்டும்  சுட்டி:

 

சித்திரையுடன் தொடர்புள்ள சில திரைப் பாடல்கள் .….

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் எம். எஸ். விஸ்வநாதன் இசையில்

பாரதிதாசனின்  “சித்திரை சோலைகளே ” பாடல் சங்கர்-கணேஷ் இரட்டையர்  இசையில்,  டி.எம். சவுந்தரராஜன் குரலில்…

 

சித்திரை செவ்வானம் சிரிக்க…

 

சிந்தனைக்கு : (சிறுசண்டைகள் பிடிபதற்கு அல்ல)

1. வான சாஸ்திர சித்திரைவருடப்பிறப்பு

2. “தமிழ்ப் புத்தாண்டு” ங்கிற ஒன்னே கிடையாது!