காப்பகம்

மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலை

யாழ்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்க்கு நிச்சயம் மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலையை (Manipay Green Hospital)  தெரிந்திருக்கும்.

ஒரு காலத்தில் திறமையான வைத்தியத்துக்கு கொடிகட்டி பறந்த வைத்தியசாலை 30 வருட போரின் பாதிப்பால் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்படிருப்பது மனவருத்ததுக்குரியது.

அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சில நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.  கீழ்வரும் காணொலியில் (video) முன்னாள் யாழ்   வைத்திய நிர்வாகஸ்தர்  நச்சினார்கினியன்(Former Director of Jaffna  General Hospital) விளக்கும் தகவல்களை  பார்த்து உங்களுக்கு ஏற்றமுகமாக உதவி செய்யுங்கள்.

பண உதவி செய்யாவிடினும்  முகநூலில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை உங்கள் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை

நன்றி.

Advertisements

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணமாம்

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்…
ஓ…கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

ஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்
Telegram நடத்தி வரார் பாத்தியும்
நம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் – ஊர்கோலக் காட்சியும்
வெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்க
இதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
மாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோ
அந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ…
அந்த Olx.., Quicker…

வரவழைப்ப தருகுது – வரவழைப்ப தருகுது
மாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோ
அந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு Recharge-தானுங்கோ…..

 

வாற்செட்டை:

எழுதியவர்  ஊரோ  பேரோ  தெரியாது.  ஆனால் மூஞ்சி புத்தகத்தில், படித்ததில்  இரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

 

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன? இருவருக்கிடையே பரிமாறிக்கொள்ளும் பரிபாஷை.

மொழி சொற்களால்  மட்டும் ஆனதல்ல. இசை,  பார்வை அல்லது   மற்றைய புலன்களை உபயோகித்தும் மொழி பகிரப்படலாம்.

மனிதர்க்கும் மிருகங்களுக்கும்  இடையேயும்  இந்த பரிபாபாஷை ஓர் மொழியாக மாறுகிறது.

ஓர் சம்பாஷனைக்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு ஒரு  பையனிடம்  பெண்-நாய் காட்டும் பாசம் கீழ்வரும் சுட்டியை பார்த்தால் புரியும்.

இந்த 4.21   நிமிட சுட்டியை எடுத்த பெண்ணின் பெயர் ஆன (Ana).   அவருடைய மகன் ஹெர்னன் (Hernan) டவுன் சின்ரோம்(Down syndrome) குறைபாடுள்ள பையன். அவர்களுடைய செல்லப் பிராணி ஹிமாலயா ( Himalaya).

ஹெர்னனுக்கு அவரை யாரும் தொடுவது பிடிக்காதாம். அப்படியிருக்கும் நிலையில் அவர்களுடைய பாசமிகு லப்ரடோர் (Labrador )  பொறுமையாக அந்தபையனிடம் விளையாட அழைப்பது கண்கொள்ளாக் காட்சி. பார்போரின் கண்களை கசிய வைக்கும் யூ- டுயூப் சுட்டி (You-Tube).

மிருகங்களுக்கு இருக்கும் அறிவு சிலவேளைகளில் மனிதர்களிடம்  ஏன் இருப்பதில்லை?

நீங்களும் ஒருமுறை இந்த சுட்டியை பாருங்களேன்!

டவுன் சின்ரோம் (Down Syndrome)

டவுன் சின்ரோம் என்பது உயிர்மத்தில் (gene) ஏற்படும்  ஓர் குறைபாடு (genetic disorder). டவுன் சின்ரோம் பாதிப்புள்ள  பிள்ளைகளின் முகச் சாயலில் விசேஷ வேறுபாடு இருக்கும். மூளை வளர்ச்சியிலும் குறைவுபாடு இருக்கும்.

காரணம்?

எல்லோருக்கும் 23 சோடி குரோமசோம் (Chromosomes) எமது ஒவ்வொரு கலத்திலும் (cell) உண்டு. அதாவது மொத்தமாக 46 குரோமசோம். இதில்  23ம் சோடி  குரோமசோம் ஆணா (Y) அல்லது பெண்ணா (X) என்று  நிர்ணயிப்பதால் அதை  பால் நிர்ணயிக்கும் குரொமசோம் (sex chromosome) என்பர்.

23 சோடி “குரோமசோம்” களை காட்டும் ஓர் வரை படம் – பிம்பம் அமரிக்க வைத்திய தேசிய நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. Photo credit: US National Library of Medicine

டவுன் சின்ரோம் பாதிப்பு  21ம் சோடி குரோமசோமில் ஏற்படும் ஒர் மாற்றம். எல்லாவற்றிலும் சிறியவரான இந்த இலக்கம் 21 இல் மூன்றாவதாக இன்னுமொரு குரோமசோம்  சேர்ந்து விடுவதால் (மொத்தமாக 3) இந்த பாதிப்பு ஏற்படுகிறது.  இந்த பாதிப்பை ட்ரைசோமி21 (trisomy 21) என்றும் சொல்வர்.

விஞ்ஞான சாஸ்திரத்தில் குரோமசோம் என்பது தமிழில் நிருவுரு என்று  அழைக்கப்படும். நிருவுரு என்பது உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள்.

பிற்குறிப்பு : சுட்டியில் உள்ள  பையன் நினைவாக “மொழி” எனும் திரைப்படத்தில் வந்த பாடல். பாடல் வரிகளை கொஞ்சம்  கூர்ந்து கேளுங்கள்!

பாடல்: வைரமுத்து, இசை: வித்தியாசாகர்