காப்பகம்

கங்காரு தர்பார்

கங்காரு தர்பார்!

கங்காரு தர்பார்!

Advertisements

நாய்களை பயப்படுத்தாதீர்கள். (படித்ததில் சிரித்தவை)

வீதியில் கிடந்த வெற்று மைலோ பக்கற் ஒன்றின் மெது வேகமாக வந்த வான் ஒன்று ஏறியதில் அது வெடித்த சத்தத்தை கேட்டு வீதி அருகில் உறங்கி கொண்டிருந்த நாய் திடுக்குற்று எழும்பி அவ் வழியால் நடந்து சென்ற வயோதிபர் ஒருவருக்கு கடித்து விட்டதாம்.

எப்படி எல்லாம் நாயை பயப்படுத்தி கடிக்க பண்ணுகிறார்கள் பார்த்தீர்களா…

வாசல் தேடி வந்த விருந்தாளி

அவுஸ்திரேலியாவில் தற்போது வெயில் காலம்.  சில மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை போக வாய்பு உண்டு.

ஒரு கோழி முட்டையை உடைத்து தாருள்ள  தெருவில் (tar road) அவிக்கக் கூடிய கொடூர வெக்கை!

தாங்கமுடியாத வெப்பமுள்ள நாட்களில் காடுகள்  அடர்த்தியான மரங்கள்  உள்ள இடங்கள் தீ பிடிக்கும். இதனருகே உள்ள வீடுகளுக்கும் தீ பற்றும்.இரு கிழமைகளுக்கு முன் மேற்கு அவுஸ்திரேலியாவில் 56 வீடுகள் பலியாகின.   துர் வசமாக இந்திய குடும்பம் ஒன்றின் வீடும் தீக்கிரையானது.

இந்த நிலையில் காடுகளில் வசிக்கும் குவாலா (koala), கங்காரு, பாம்பு போன்றவை, சிதரடித்து  ஓடுவது சகஜம்.

இன்று “டுவிட்டர்” ல் (Twitter) குளிர் தேடி வீடு வந்த பாம்பின் படம்.

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன? இருவருக்கிடையே பரிமாறிக்கொள்ளும் பரிபாஷை.

மொழி சொற்களால்  மட்டும் ஆனதல்ல. இசை,  பார்வை அல்லது   மற்றைய புலன்களை உபயோகித்தும் மொழி பகிரப்படலாம்.

மனிதர்க்கும் மிருகங்களுக்கும்  இடையேயும்  இந்த பரிபாபாஷை ஓர் மொழியாக மாறுகிறது.

ஓர் சம்பாஷனைக்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு ஒரு  பையனிடம்  பெண்-நாய் காட்டும் பாசம் கீழ்வரும் சுட்டியை பார்த்தால் புரியும்.

இந்த 4.21   நிமிட சுட்டியை எடுத்த பெண்ணின் பெயர் ஆன (Ana).   அவருடைய மகன் ஹெர்னன் (Hernan) டவுன் சின்ரோம்(Down syndrome) குறைபாடுள்ள பையன். அவர்களுடைய செல்லப் பிராணி ஹிமாலயா ( Himalaya).

ஹெர்னனுக்கு அவரை யாரும் தொடுவது பிடிக்காதாம். அப்படியிருக்கும் நிலையில் அவர்களுடைய பாசமிகு லப்ரடோர் (Labrador )  பொறுமையாக அந்தபையனிடம் விளையாட அழைப்பது கண்கொள்ளாக் காட்சி. பார்போரின் கண்களை கசிய வைக்கும் யூ- டுயூப் சுட்டி (You-Tube).

மிருகங்களுக்கு இருக்கும் அறிவு சிலவேளைகளில் மனிதர்களிடம்  ஏன் இருப்பதில்லை?

நீங்களும் ஒருமுறை இந்த சுட்டியை பாருங்களேன்!

டவுன் சின்ரோம் (Down Syndrome)

டவுன் சின்ரோம் என்பது உயிர்மத்தில் (gene) ஏற்படும்  ஓர் குறைபாடு (genetic disorder). டவுன் சின்ரோம் பாதிப்புள்ள  பிள்ளைகளின் முகச் சாயலில் விசேஷ வேறுபாடு இருக்கும். மூளை வளர்ச்சியிலும் குறைவுபாடு இருக்கும்.

காரணம்?

எல்லோருக்கும் 23 சோடி குரோமசோம் (Chromosomes) எமது ஒவ்வொரு கலத்திலும் (cell) உண்டு. அதாவது மொத்தமாக 46 குரோமசோம். இதில்  23ம் சோடி  குரோமசோம் ஆணா (Y) அல்லது பெண்ணா (X) என்று  நிர்ணயிப்பதால் அதை  பால் நிர்ணயிக்கும் குரொமசோம் (sex chromosome) என்பர்.

23 சோடி “குரோமசோம்” களை காட்டும் ஓர் வரை படம் – பிம்பம் அமரிக்க வைத்திய தேசிய நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. Photo credit: US National Library of Medicine

டவுன் சின்ரோம் பாதிப்பு  21ம் சோடி குரோமசோமில் ஏற்படும் ஒர் மாற்றம். எல்லாவற்றிலும் சிறியவரான இந்த இலக்கம் 21 இல் மூன்றாவதாக இன்னுமொரு குரோமசோம்  சேர்ந்து விடுவதால் (மொத்தமாக 3) இந்த பாதிப்பு ஏற்படுகிறது.  இந்த பாதிப்பை ட்ரைசோமி21 (trisomy 21) என்றும் சொல்வர்.

விஞ்ஞான சாஸ்திரத்தில் குரோமசோம் என்பது தமிழில் நிருவுரு என்று  அழைக்கப்படும். நிருவுரு என்பது உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள்.

பிற்குறிப்பு : சுட்டியில் உள்ள  பையன் நினைவாக “மொழி” எனும் திரைப்படத்தில் வந்த பாடல். பாடல் வரிகளை கொஞ்சம்  கூர்ந்து கேளுங்கள்!

பாடல்: வைரமுத்து, இசை: வித்தியாசாகர்