காப்பகம்

செம்மஞ்சள் பூக்கள் (Orange Trumpet Vines)

எமது வீட்டு வேலியில் படரும் செம்மஞ்சள் ஊதுகுழல் பூக்கள்  (Orange trumpet vine). தண்ணீர் ஊற்றி பந்தலை  பார்த்துகொள்வது  என்னவோ அடுத்த வீட்டு சொத்தக்காரர் – ஆனால் பந்தல் பூத்துக் குலுங்குவது எம் வீட்டு பக்கம்.

flame vine

Flame vine 3 Flame vines 2

மத்திய அமரிக்க  நாடுகளான  பிரேசில், ஆர்ஜன்டீனா,  (B)பொலிவியா, பர(G)குவை போன்றவற்றிற்கு சொந்தமான  சுவாலை கொடி (flame vine) படத்தில் பூத்திருப்பது  பேர்த், அவ்ஸ்திரேலியாவில்.

ஊதுகுழல் போஎன்ற பூக்கள்

ஊதுகுழல் போன்ற பூக்கள்   (ஆரஞ்சு ட்ர்ம்பெட் பூக்கள்)

பூங்கொத்து

பூங்கொத்து

கார்த்திகைக்கு இரண்டு குத்து!

குத்து என்றதும் “டிஷ்யூம்” “டிஷ்யூம்” குத்து சண்டை அல்லது நயனின் குத்து பாட்டு என்று எண்ணி விடாதீர்கள்.

நான் குறிப்பிடுவது உயிர் மெய்யெழுத்துக்களின் புள்ளிகள்!

பதின்ம வயதில்  சூப்பர்(G)குளூ மாதிரி (super Glue) மூளையில் ஒட்டிய ஓர் இலக்கண பகிர்வு.

மெய்யெழுத்துக்களின் புள்ளிகளை ஒற்றுக்கள் என்றும் அழைப்பர். ஒரு சொல்லில் இரண்டு புள்ளிகள் அருகருகே அமைந்தால் அவை ஈரொற்றுக்கள் என அழைப்பதாக ஞாபகம்.

அப்ப கார்த்திகைக்கு இரண்டு குத்து என்றது சரிதானே.

 

அந்த வகையில் சில ஈரொற்று சொற்கள் பின்வருமாறு:

(ர்த்) : கார்த்திகை, பார்த்தேன், அர்த்தம்

(ர்க்) : சர்க்கரை, அமர்க்களம், ஈர்க்கு

(ர்ப்) : சர்ப்பம், சந்தர்ப்பம், ஈர்ப்பு, தீர்ப்பு

(ழ்ச்) : புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி

(ர்ந்) : அமர்ந்

கார்த்திகை விரதம், கார்த்திகை தீபம், கல்யாண சீசன் என மிகவும் அமர்க்களமான கார்த்திகை மாதத்தில் பூக்கும் பூவிற்கும் பெயர் கார்த்திகைப்பூ!

தமிழ் நாட்டின் மாநில பூவாக பிரகடனம் செய்த மலருக்கு தாவரவியல் பெயர் (குளோறியோசா சுப்பேர்பா – Gloriosa Superba).  லில்லி (Lily) குடும்பத்தை  சேர்ந்த கிழங்கு தாவரத்தின் பூ, தமிழ் இலக்கியங்களில் காந்தள் (செங்காந்தள், வெண் காந்தள்) என குறிபிடப்பட்டுள்ளது.

https://www.flickr.com/photos/lorindalee/5905812185/sizes/z/in/photostream/

 

photo credit: Garden Queen

நச்சுத் தாவரமான கார்த்திகைக் கொடியின் சிறப்பு அதன் இலை நுனிகள், தந்து ஆக திரிபடைந்து,  கொடிக்கு  பற்றியேற உதவுகிறது.(tips of the leaves are modified as tendrils to climb)

ஈரொற்றுக்கள் வரும் கார்த்திகையை குறிப்பிட்டு விட்டு, தமிழ் திரைப்பாடலை குறிப்பிடாமல் விடுவது முறையா?

‘கார்த்திகை மாதம்’ என்று ஆரம்பிக்கும் பாடலையும் கேட்டுத்தான் பாருங்களேன்

 

படம்: வைர நெஞ்சம் (1975),

பாடியவர்கள்: T.M. சவுந்தரராஜன் & L.R. ஈஸ்வரி

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்

இசை: M. S. விஸ்வநாதன்

 

வாற்செட்டை:

கடந்த வருடம்  “நாலு வரி நோட்டு” இணயத்திற்கு எழுதிய கிறுக்கல். நேரம் தாமதமானதால் பிரசுரிக்கப்படவில்லை. அதனால் இந்த கார்த்திகைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.)

வெங்காய சேமிப்பு பட்டறை

வெங்காய சேமிப்பு பட்டறை

பாரம்பரிய முறையில் சேமிப்பு ( படம் :பசுமை விகடன்)

பாரம்பரிய முறையில் சேமிப்பு ( படம் :பசுமை விகடன்)

முதல் தடவையாக இவ் வெங்காய பட்டறையை பார்த்தவுடன்  மனதில் மகிழ்ச்சி. பசுமையான சிறு பிள்ளை நினைவுகள் யாழ்பாணத்திற்கு இழுத்து செல்கிறது.

யாழ்பாணத்தில் கமக்காரர்  வெங்காய பூண்டு சாகுபடியின் பின்னர்  காய வைப்பர்.  காய்ந்து போன  வெங்காய தாள்களை  (பூண்டின்  அடித்தண்டு-stalk) சேர்த்துக் கற்றை கற்றையாகக் கட்டி   உள் கூரையில் அல்லது கொட்டில்களில் தொங்க போட்டு விடுவார்கள். நல்ல காற்றோட்டம்  வெங்காய கற்றையை சுற்றி இருப்பதால்  பல நாட்களுக்கு வெங்காயம் பழுது படாமல் இருக்கும்.

மரக்கறி சந்தைகளில் முக்கியமாக சுன்னாகம், தின்னவேலி சந்தைகளில்  வெங்காய கற்றைகள் தான்  விற்பனைக்கு இருக்கும்.

வீட்டுக்கு வாங்கி செல்பவர்களும் கூரை முகட்டில் தொங்க விட்டு விடுவார்கள். வீட்டில் தேவை யானபோது  வெங்காய ‘கத்தை’ யில்இருந்து  புடுங்கி எடுப்பார்கள்.

நம் ஊர்களில் சின்ன வெங்காயம் கிடைப்பதுபோல் அவுஸ்த்ரேலியாவில் கிடைப்பதில்லை.இது ஷலொட் (shallot) என்ற பெயரில் எள்ளு அளவில் விற்பனைக்குண்டு. பம்பாய் வெங்காயம் (Bombay onion) எனப்படும் பெரிய வெங்காயம்(வெள்ளை, சிகப்பு, உரோசா -White, Red, Pink ) தாராளமாகக் கிடைக்கும்.

வெங்காய துணுக்குகள்:

 *  தாவரவியல் பெயர் (Botanical Name): ஏலியம் சீப்பா (Allium cepa)

* உலக  வெங்காய சாகுபடியில்  சீனாவுக்கு பின்னாக இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது.