காப்பகம்

பாங்ஸியா பூங்கொத்து (Banksia)

அவுஸ்த்ரேலிய கண்டத்துக்கே உரித்தான ஒரு பூங்கொத்து.  பாங்ஸியா(Banksia) எனப்படும் கூம்புருவான  இவ் மலர் கொத்தில் ஒவ்வுரு நாரும் ஒவ்வொரு மலர்.

Proteacea குடும்பத்தை சேர்ந்த இப்பூவினம் பல நிறங்களில் உண்டு

 

banksia-cone

 

matured-banksia

முதிர்ந்த பாங்ஸியா(Banksia) பூங்கொத்து  (ST2016)

 

 

bank-flr

தனிப் பூவின் விளக்கம்

 

Credit:  http://anpsa.org.au/banksia1.html

Advertisements

நாதஸ்வரத்தில் திரைப்பாடல்

வரியந்தோரும் நடக்கும் யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் தவில் நாதசுர கச்சேரிகள் சகஜம். கோயில்களுக்கேற்ப 10, 15,25 நாட்களென திருவிழாக்கள் தொடரும். திருவிழாக் கடைசி நாட்களில் முக்கியமாக சப்பறம், தேர், தீர்த்தம் , பூங்காவனம் போன் ற  திருநாட்களில் பல தவில் நாதஸ்வர வித்துவான்கள் கச்சேரிக்கு வருவார்கள்.  இவர்கள் கச்சேரி, கடைசியில் மேளச் சமாவுடன் முடிவு பெறும்.

பிரசித்தி பெற்ற யாழ்  நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக்களில் 23ம் நாள் தேர் உற்சவம் நடைபெறும். காலையில் தேர் இழுத்த பிற்பாடு,  பிற்பகலில் சாமி இறக்குவதற்கு முன் தவில் /நாதஸ்வரக் கச்சேரி  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.  இது இலங்கை வானொலியில் அநேகமாக ஒலிபரப்பப்பட்ட காலமும் உண்டு. (தற்போதய நிலை தெரியாது).

கிராமப்புற கோவில் திருவிழாக்களில் தவில் கச்சேரிக்குப் பின்னால்  “சின்ன மேளம்” நடனக்குழு, பொப் இசை பாடல் குழு என இத்தியாதி இத்தியாதி. இதற்காக இரசிகர் கூட்டம் பல தூர இடங்களில் இருந்து படையெடுக்கும். இதைவிட இலங்கை இந்திய புகழ் பெற்ற யாழ் மகன்  தட்சனாமூர்த்தியின் கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். தவில் மேதையை பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் வாரி வாரியாக வந்திறங்கும்.

சிறுவயதில் மீசாலையில்  வெறுங்கால்களுடன் மணல் வீதிகளை உலாத்தி  வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில் திருவிழாக்களை பார்த்த காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.  சாவகச்சேரி நாதஸ்வர  வித்துவான் ஸ்ரீ பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலக்கிருஷ்ணன் நாதஸ்வர சகோதரர்கள், தவில் கணேசன், கானா மூர்த்தி – பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இப்படிப் பலப் பல கலைஞர்கள்….

இக்கோவிலில் பல  தவில் கச்சேரிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு  தொடங்கும் கோலாகலம் விடிய விடிய தொடரும்.ஒரு தவில் நாதஸ்வர குழுவிற்கு சுமாராக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். கச்சேரிகள் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்து கீர்த்தனைகள் வாசித்து கடைசி 10 – 15 நிமிடங்கள் திரைப்பட மெட்டிற்கு ஒதுக்கப்படும். இளவயது ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான நேரம். நடுச் சாமத்தில் பாதி கண் மூடி கோழித்தூக்கம் போட்டவர்கள், கச்சான் கொறித்துக் கொண்டிருப்பவர்கள், ஊர்க்கதை அலட்டிக் கொண்டிருப்பவர்கள்  எல்லாம்  நாதஸ்வரத்தில் திரைமெட்டு தொடங்கியவுடனேயே பரபரப்பாக விழித்துக்கொள்வார்கள், திரைமெட்டைக் கண்டு பிடித்தவுடனே கூட்டத்தில் கைதட்டல் தொடங்கிவிடும். தில்லானா மோகனாம்பாள், திருவிளயாடல் திரைப்படப் பாடல்கள், இதை விட சிங்காரவேலனடி தேவா, அதிசயராகம் (அபூர்வ ராகம்) போன்றமெட்டுக்கள் பிரபலம்.

இவையெல்லாம் பார்த்து பலவருடங்களாகி விட்டன. போர்க் காலங்களில் திருவிழாக் கச்சேரிகள் பகல் வேளையில் வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். யதேட்சையாக முகநூலில்  கீழ்வரும் காணொலியை பார்த்தவுடன்  பழைய நினவுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.  இந்தக் காணொலியும் யாழ்ப்பாணத்தில் குமரன் குழுவினர்களால் வாசிக்கப்பட்டது என்பது முகநூல் தகவல்கள். இதில் உள்ள நாதஸ்வர வித்துவான் வேறுயாருமல்ல. புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன்! நான் கேட்டு ரசித்தது போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்..

நன்றி: முகநூல்- தமிழ் வானம்

 

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்

இப்பதிவில் சில உண்மைகளை மிகவும் அழகாக விஸ்தரித்துள்ளார்கள்,   (அழகோவியம் பக்கத்தில், மூஞ்சிப்புத்தகத்தில் இருந்து கடத்தியது)

ஆனால் — ஜுன் ஆரம்பம்  இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும்….இது  பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளக்குறிக்கிறதோ?

அங்கு நீண்ட வசந்தகால விடுமுறை (summer holidays)  இந்த க்காலப்பகுதியில் தானே?  🙂

செம்மஞ்சள் பூக்கள் (Orange Trumpet Vines)

எமது வீட்டு வேலியில் படரும் செம்மஞ்சள் ஊதுகுழல் பூக்கள்  (Orange trumpet vine). தண்ணீர் ஊற்றி பந்தலை  பார்த்துகொள்வது  என்னவோ அடுத்த வீட்டு சொத்தக்காரர் – ஆனால் பந்தல் பூத்துக் குலுங்குவது எம் வீட்டு பக்கம்.

flame vine

Flame vine 3 Flame vines 2

மத்திய அமரிக்க  நாடுகளான  பிரேசில், ஆர்ஜன்டீனா,  (B)பொலிவியா, பர(G)குவை போன்றவற்றிற்கு சொந்தமான  சுவாலை கொடி (flame vine) படத்தில் பூத்திருப்பது  பேர்த், அவ்ஸ்திரேலியாவில்.

ஊதுகுழல் போஎன்ற பூக்கள்

ஊதுகுழல் போன்ற பூக்கள்   (ஆரஞ்சு ட்ர்ம்பெட் பூக்கள்)

பூங்கொத்து

பூங்கொத்து

அருமையான சித்திர இராமாயணம்

பிறப்பில் இருந்து பட்டாபிஷேகம் வரை  இராமனின் வரலாறு  சித்திரத்தில் –  ஓவியருக்கு ஒரு சபாஷ்!

<

கார்த்திகைக்கு இரண்டு குத்து!

குத்து என்றதும் “டிஷ்யூம்” “டிஷ்யூம்” குத்து சண்டை அல்லது நயனின் குத்து பாட்டு என்று எண்ணி விடாதீர்கள்.

நான் குறிப்பிடுவது உயிர் மெய்யெழுத்துக்களின் புள்ளிகள்!

பதின்ம வயதில்  சூப்பர்(G)குளூ மாதிரி (super Glue) மூளையில் ஒட்டிய ஓர் இலக்கண பகிர்வு.

மெய்யெழுத்துக்களின் புள்ளிகளை ஒற்றுக்கள் என்றும் அழைப்பர். ஒரு சொல்லில் இரண்டு புள்ளிகள் அருகருகே அமைந்தால் அவை ஈரொற்றுக்கள் என அழைப்பதாக ஞாபகம்.

அப்ப கார்த்திகைக்கு இரண்டு குத்து என்றது சரிதானே.

 

அந்த வகையில் சில ஈரொற்று சொற்கள் பின்வருமாறு:

(ர்த்) : கார்த்திகை, பார்த்தேன், அர்த்தம்

(ர்க்) : சர்க்கரை, அமர்க்களம், ஈர்க்கு

(ர்ப்) : சர்ப்பம், சந்தர்ப்பம், ஈர்ப்பு, தீர்ப்பு

(ழ்ச்) : புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி

(ர்ந்) : அமர்ந்

கார்த்திகை விரதம், கார்த்திகை தீபம், கல்யாண சீசன் என மிகவும் அமர்க்களமான கார்த்திகை மாதத்தில் பூக்கும் பூவிற்கும் பெயர் கார்த்திகைப்பூ!

தமிழ் நாட்டின் மாநில பூவாக பிரகடனம் செய்த மலருக்கு தாவரவியல் பெயர் (குளோறியோசா சுப்பேர்பா – Gloriosa Superba).  லில்லி (Lily) குடும்பத்தை  சேர்ந்த கிழங்கு தாவரத்தின் பூ, தமிழ் இலக்கியங்களில் காந்தள் (செங்காந்தள், வெண் காந்தள்) என குறிபிடப்பட்டுள்ளது.

https://www.flickr.com/photos/lorindalee/5905812185/sizes/z/in/photostream/

 

photo credit: Garden Queen

நச்சுத் தாவரமான கார்த்திகைக் கொடியின் சிறப்பு அதன் இலை நுனிகள், தந்து ஆக திரிபடைந்து,  கொடிக்கு  பற்றியேற உதவுகிறது.(tips of the leaves are modified as tendrils to climb)

ஈரொற்றுக்கள் வரும் கார்த்திகையை குறிப்பிட்டு விட்டு, தமிழ் திரைப்பாடலை குறிப்பிடாமல் விடுவது முறையா?

‘கார்த்திகை மாதம்’ என்று ஆரம்பிக்கும் பாடலையும் கேட்டுத்தான் பாருங்களேன்

 

படம்: வைர நெஞ்சம் (1975),

பாடியவர்கள்: T.M. சவுந்தரராஜன் & L.R. ஈஸ்வரி

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்

இசை: M. S. விஸ்வநாதன்

 

வாற்செட்டை:

கடந்த வருடம்  “நாலு வரி நோட்டு” இணயத்திற்கு எழுதிய கிறுக்கல். நேரம் தாமதமானதால் பிரசுரிக்கப்படவில்லை. அதனால் இந்த கார்த்திகைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.)

தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு …….கடல் கடந்த காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்…

இது தானோ கடல் கடந்து மொழி பரப்பல் என்பது.

முயற்சி செய்வதற்கே நூறு புள்ளிகள் கொடுக்க வேண்டும்!

இலங்கை தமிழர் தனிநாயகம் அடிகளார் இதைக் கேட்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். இப்படியாகிலும் தமிழ் உலகெங்கும் பரம்ப வேண்டும் என்பது எனது ஆவல்.