காப்பகம்

உயிர்த்தெழுந்த திருநாள்

ஆண்டவரின் திருத்தூதன் அவரைப் பார்த்து

“அறையுண்டு மடிந்தவரை பார்க்க வந்தீர் ஈண்டவரின் உடல்இல்லை

உரைத்த வாறே

இயேசு பிரான் உயிர்த்தெழுந்தார்;

இங்கே நீங்கள் வேண்டுமெனில் சடலத்தை வைத்த அந்த வியந்தகுந்த கல்லறையைப் பார்த்து செல்வீர்!

காண்டகைய செய்திதன்னைக் கண்ட பின்பு கட்டாயம் சீடரிடம் போய்ச்சொல் லுங்கள்!”

எனக்கூறி திருத்தூதன் முடித்தான்;
கவியரசு கண்ணதாசன்
(இயேசு காவியம்)

Advertisements

பணத்திற்கு பல பெயர்கள்

பணத்திற்கு பல பெயர்கள்

கோயிலுக்கு காணிக்கை

வறியவனுக்கு பிச்சை    

அரசன் கொடுப்பது பொற்கிழி

 

உலோகத்தால் செய்தது நாணயம் (அக்கம்)

கடதாசியில் அடித்தது தாள்

பத்திரிகையில் கையொப்பமிட்டது காசோலை

இணயத்தில் பரிமாறல் “பிட் நாணயம் (bit coin)

வெளிநாடுகளுடன் அந்நிய செலவாணி

 

சிற்றரசன் பேரரசனுக்கு கப்பம்

அரசாங்கத்திற்கு   கொடுப்பது வரி

அதிகாரிக்கு கொடுப்பது லஞ்சம்

நீதிமன்றத்தில் அது அபராதம்

அடுத்தவரிடம் கேட்பது கடன்

கடனுக்கு பிடிப்பது வட்டி

 

திருமணத்தில் அது வரதட்சனை

விவாகரத்தில் சீவனாம்சம் (alimony)

முற்பணமாக அட்சவாரம் (advance)

புதுவருடத்தில் கைவியளம் (கைவிசேடம்)

சிறு பிள்ளைக்கு கைப்பணம்

 

நாளாந்த தொழிலாளிக்கு கூலி

மாதந்த தொழிலாளிக்கு வேதனம் (சம்பளம்)

இளைபாறியோர் பெறுவது ஓய்வூதியம்

வரவு செலவுக்கு கணக்குப்பிள்ளை

கொடுக்கல் வாங்கல்: தனாதிகாரி

நாட்டிற்கு அதுவே நிதி அமைச்சர் 

 

சபா-தம்பி 2016

panam

 

பணத்தோடு சம்பத்தப்பட்ட  பாடல்கள்  சில:

 

 

 

வாழ்வின் பக்குவம்! (Attitude to life)

முகநூலில் ஒரு முத்து.

 

14202591_1096500307053862_1611847426884236335_n