காப்பகம்

நாதஸ்வரத்தில் திரைப்பாடல்

வரியந்தோரும் நடக்கும் யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் தவில் நாதசுர கச்சேரிகள் சகஜம். கோயில்களுக்கேற்ப 10, 15,25 நாட்களென திருவிழாக்கள் தொடரும். திருவிழாக் கடைசி நாட்களில் முக்கியமாக சப்பறம், தேர், தீர்த்தம் , பூங்காவனம் போன் ற  திருநாட்களில் பல தவில் நாதஸ்வர வித்துவான்கள் கச்சேரிக்கு வருவார்கள்.  இவர்கள் கச்சேரி, கடைசியில் மேளச் சமாவுடன் முடிவு பெறும்.

பிரசித்தி பெற்ற யாழ்  நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக்களில் 23ம் நாள் தேர் உற்சவம் நடைபெறும். காலையில் தேர் இழுத்த பிற்பாடு,  பிற்பகலில் சாமி இறக்குவதற்கு முன் தவில் /நாதஸ்வரக் கச்சேரி  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.  இது இலங்கை வானொலியில் அநேகமாக ஒலிபரப்பப்பட்ட காலமும் உண்டு. (தற்போதய நிலை தெரியாது).

கிராமப்புற கோவில் திருவிழாக்களில் தவில் கச்சேரிக்குப் பின்னால்  “சின்ன மேளம்” நடனக்குழு, பொப் இசை பாடல் குழு என இத்தியாதி இத்தியாதி. இதற்காக இரசிகர் கூட்டம் பல தூர இடங்களில் இருந்து படையெடுக்கும். இதைவிட இலங்கை இந்திய புகழ் பெற்ற யாழ் மகன்  தட்சனாமூர்த்தியின் கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். தவில் மேதையை பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் வாரி வாரியாக வந்திறங்கும்.

சிறுவயதில் மீசாலையில்  வெறுங்கால்களுடன் மணல் வீதிகளை உலாத்தி  வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில் திருவிழாக்களை பார்த்த காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.  சாவகச்சேரி நாதஸ்வர  வித்துவான் ஸ்ரீ பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலக்கிருஷ்ணன் நாதஸ்வர சகோதரர்கள், தவில் கணேசன், கானா மூர்த்தி – பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இப்படிப் பலப் பல கலைஞர்கள்….

இக்கோவிலில் பல  தவில் கச்சேரிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு  தொடங்கும் கோலாகலம் விடிய விடிய தொடரும்.ஒரு தவில் நாதஸ்வர குழுவிற்கு சுமாராக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். கச்சேரிகள் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்து கீர்த்தனைகள் வாசித்து கடைசி 10 – 15 நிமிடங்கள் திரைப்பட மெட்டிற்கு ஒதுக்கப்படும். இளவயது ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான நேரம். நடுச் சாமத்தில் பாதி கண் மூடி கோழித்தூக்கம் போட்டவர்கள், கச்சான் கொறித்துக் கொண்டிருப்பவர்கள், ஊர்க்கதை அலட்டிக் கொண்டிருப்பவர்கள்  எல்லாம்  நாதஸ்வரத்தில் திரைமெட்டு தொடங்கியவுடனேயே பரபரப்பாக விழித்துக்கொள்வார்கள், திரைமெட்டைக் கண்டு பிடித்தவுடனே கூட்டத்தில் கைதட்டல் தொடங்கிவிடும். தில்லானா மோகனாம்பாள், திருவிளயாடல் திரைப்படப் பாடல்கள், இதை விட சிங்காரவேலனடி தேவா, அதிசயராகம் (அபூர்வ ராகம்) போன்றமெட்டுக்கள் பிரபலம்.

இவையெல்லாம் பார்த்து பலவருடங்களாகி விட்டன. போர்க் காலங்களில் திருவிழாக் கச்சேரிகள் பகல் வேளையில் வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். யதேட்சையாக முகநூலில்  கீழ்வரும் காணொலியை பார்த்தவுடன்  பழைய நினவுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.  இந்தக் காணொலியும் யாழ்ப்பாணத்தில் குமரன் குழுவினர்களால் வாசிக்கப்பட்டது என்பது முகநூல் தகவல்கள். இதில் உள்ள நாதஸ்வர வித்துவான் வேறுயாருமல்ல. புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன்! நான் கேட்டு ரசித்தது போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்..

நன்றி: முகநூல்- தமிழ் வானம்

 

Advertisements

இனிய நத்தார் வாழ்த்துக்கள்

ஒரு சில வரிகளில் இயேசுவின் பிறப்பு :

ஆதி நல் வார்த்தை ஆணகமடைந்து,

அன்புடன் அவனிதனில்

நீதி நிழற்றும் நின்மலனாக

நீசரைத் தேடி வந்தான்,

பூவுலகென்றுமே போற்ற

மூவுலகும் துதி முழங்கும்;

தந்தை சுதனும் தார்மிகனாவி

சிந்தை வைத் தேத்திடுவோம்.

– ஏ. எம். கே. குமாரசாமி –

(கீர்தன கீத சங்கிரகம் – இலங்கை மெதடிஸ்த திருச்சபை   பாடல் புத்தகத்திலிருந்து சில வரிகள்)

கார்த்திகைக்கு இரண்டு குத்து!

குத்து என்றதும் “டிஷ்யூம்” “டிஷ்யூம்” குத்து சண்டை அல்லது நயனின் குத்து பாட்டு என்று எண்ணி விடாதீர்கள்.

நான் குறிப்பிடுவது உயிர் மெய்யெழுத்துக்களின் புள்ளிகள்!

பதின்ம வயதில்  சூப்பர்(G)குளூ மாதிரி (super Glue) மூளையில் ஒட்டிய ஓர் இலக்கண பகிர்வு.

மெய்யெழுத்துக்களின் புள்ளிகளை ஒற்றுக்கள் என்றும் அழைப்பர். ஒரு சொல்லில் இரண்டு புள்ளிகள் அருகருகே அமைந்தால் அவை ஈரொற்றுக்கள் என அழைப்பதாக ஞாபகம்.

அப்ப கார்த்திகைக்கு இரண்டு குத்து என்றது சரிதானே.

 

அந்த வகையில் சில ஈரொற்று சொற்கள் பின்வருமாறு:

(ர்த்) : கார்த்திகை, பார்த்தேன், அர்த்தம்

(ர்க்) : சர்க்கரை, அமர்க்களம், ஈர்க்கு

(ர்ப்) : சர்ப்பம், சந்தர்ப்பம், ஈர்ப்பு, தீர்ப்பு

(ழ்ச்) : புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி

(ர்ந்) : அமர்ந்

கார்த்திகை விரதம், கார்த்திகை தீபம், கல்யாண சீசன் என மிகவும் அமர்க்களமான கார்த்திகை மாதத்தில் பூக்கும் பூவிற்கும் பெயர் கார்த்திகைப்பூ!

தமிழ் நாட்டின் மாநில பூவாக பிரகடனம் செய்த மலருக்கு தாவரவியல் பெயர் (குளோறியோசா சுப்பேர்பா – Gloriosa Superba).  லில்லி (Lily) குடும்பத்தை  சேர்ந்த கிழங்கு தாவரத்தின் பூ, தமிழ் இலக்கியங்களில் காந்தள் (செங்காந்தள், வெண் காந்தள்) என குறிபிடப்பட்டுள்ளது.

https://www.flickr.com/photos/lorindalee/5905812185/sizes/z/in/photostream/

 

photo credit: Garden Queen

நச்சுத் தாவரமான கார்த்திகைக் கொடியின் சிறப்பு அதன் இலை நுனிகள், தந்து ஆக திரிபடைந்து,  கொடிக்கு  பற்றியேற உதவுகிறது.(tips of the leaves are modified as tendrils to climb)

ஈரொற்றுக்கள் வரும் கார்த்திகையை குறிப்பிட்டு விட்டு, தமிழ் திரைப்பாடலை குறிப்பிடாமல் விடுவது முறையா?

‘கார்த்திகை மாதம்’ என்று ஆரம்பிக்கும் பாடலையும் கேட்டுத்தான் பாருங்களேன்

 

படம்: வைர நெஞ்சம் (1975),

பாடியவர்கள்: T.M. சவுந்தரராஜன் & L.R. ஈஸ்வரி

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்

இசை: M. S. விஸ்வநாதன்

 

வாற்செட்டை:

கடந்த வருடம்  “நாலு வரி நோட்டு” இணயத்திற்கு எழுதிய கிறுக்கல். நேரம் தாமதமானதால் பிரசுரிக்கப்படவில்லை. அதனால் இந்த கார்த்திகைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.)

புது வருட வாழ்த்துக்கள் (2014)

புதிய 2014 …

நலமுடன் நகர,

நண்பர்கள் யாவர்க்கும்

நல்லாசிகள் உரித்தாகுக!

புதிய வருடங்களோடு தொடர்புடைய சில திரைப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  கேட்டுத்தான் பாருங்களேன்!

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்…

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் உருவாகிய பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள்   P.B. ஸ்ரீனிவாஸ், S. ஜானகி

திரைப்படம் :  பொலீஸ்காரன் மகள்  (1962)

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

துரதிர்ஷ்டவசமாக  கடந்த ஆண்டு ராமமூர்த்தியும்,  P.B. ஸ்ரீனிவாஸும்  இயற்கை எய்திவிட்டார்கள். 😦 ஆயினும் அவர்களுடைய பாடல்கள் இன்னும்  ரீங்காரம் இட்டுக்கொண்டே  இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இளமை இதோ இதோ..

எண்பதுகளில்   வெளிவந்த அட்டகாசமான பாடல், ஆங்கிலத்தில் வாழ்துக்கள் பாடி ஆரம்பிக்கிறது. இளம் கமலஹாசன்  நடனமாடும் பாடலில் ஆங்காங்கே அவர் நடித்த படங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடியவர்கள்; S.P. பாலசுப்ரமணியம் குழுவினர்

இசையமைத்தவர் :இளையராஜா

பாடல் : இளமை இதோ இதோ..

திரைப்படம்: குரு (1980)

தை மாதம் இல்லாமல் புதுவருடமா…?

 

மகாகவி பாரதியாரின் ஜயந்தி தினம் இன்று (11.12.13)

மிகப் பிரபல்யமான மகாகவி பாரதியாரின் புகைப்படம் (சென்னை 1920)

மகாகவி, மனைவி செல்லம்மாளுடன் (1917)

பாரதியாரின் புகைப் படங்களை பார்ப்பதற்கு மகாகவி

பாரதி பிறந்த இல்லம் கட்டுரை

பாரதியார் கட் டுரை