இராஜாஜி பிறந்த நாள் நினைவாக… (1878 – 1972)

டிசம்பர் 10, தமிழகம் தந்த மூதறிஞர்  இராஜாஜி எனும்  சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சியார்   பிறந்த தினம்.

இவர் பிரிதானிய அரசு காலத்தில் மதராஸ் முதல்வராக மட்டும் அல்லாது பின்னர் இந்தியாவின் முதல் கவனர் ஜெனரல் (Governor General) ஆகவும் பதவியேற்றவர் .

மந்திரி பதவிகள் மட்டுமல்லாது   சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து (பாரதக் கதை) இராமாயணம் போன்ற பதிப்புக்களை தமிழ் வாசகர்களுக்கு தந்தவர்.

இன்றும் பிரபலமான “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா” என்றபாடல் ராஜாஜியால் இயற்றப்பட்டு  எம்.எஸ் சுப்புலட்சுமியால் பாடப்பட்டது.

இவை தவிர ஔவையாரின்  55 பாடல்களை  மூன்று  கட்டுரைகளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து   ஔவையாரின்  திறமையை பிற உலகத்திற்கு பறை சாற்றினார். இவருடைய   மொழி பெயர்த்த கட்டுரைகள் மகாத்மா காந்தியின் கையால்  எடிட்  செய்யப்பட்டு  1928 இல்  “Young India” (June 21, 28, July 5 1928 issues) இதழ்களில் வெளியிடப்பட்டன.

ஓவியர் நாமகிரி கை வண்ணத்தில்  இராஜாஜியார்.

ஓவியர் நாமகிரி கை வண்ணத்தில் இராஜாஜியார்.

ஔவையாரின் ஒரு பாடல், ராஜாஜியின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் :

உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைத்து எண்ணுவன – கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

ஆங்கிலத்தில்:

“A measure of rice fills the belly;

Four cubits clothe the body:

But one must think and think

His eighty crores of plans;

And until Death comes like the mudpot`s end,

The blind men of this earth

Must spend all their lives

In agitation of worry”

வாற்செட்டை குறிப்புகள்:

1. விகடன் கட்டுரை 

2. சும்மா கொஞ்சம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s